29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அதிகாரம் என்பது நம்பிக்கையினால் மட்டுமே வரக்கூடியது

🔥 Views : 7
👁 Reading Now : 47

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிகேஆரின் 24ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி தமது முகநூலில் பதிவிட்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மக்களின் நல்வாழ்வுக்கு பிகேஆர் உறுப்பினர்களும் தலைவர்களும் முக்கியத்துவம் தர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கா வண்ணம் பிகேஆர் தலைவர்கள் தங்களது கடமையை சுயநலமில்லாது ஆற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
நம்முடைய சேவை நம்பிக்கைத் தன்மையோடு சுயநலமின்றி இருந்தால் மட்டுமே அதிகாரம் கையில் கிடைக்குமே ஒழிய, அது சலுகையின் மூலம் பெறப்படுவது இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களின் வாழ்க்கை சீரடைந்தால் அரசின் மீதான நம்பிக்கை பிறக்கும் என்றும் அதுவே ஆட்சிக்கு மிகப் பெரிய பலமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles