25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நஜிப்பிற்கு நீதி கிடைக்க அரச விசாரணை ஆணையம் வேண்டும்

🔥 Views : 5
👁 Reading Now : 46

🔊To listen to this news in Tamil, Please select the text.

எஸ்ஆர்சி சீராய்வு மனுவில் தோல்வியடைந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நீதி கிடைக்க அரச விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டுமென அம்னோ இளஞர் பிரிவுத் தலைவர் Akmal Saleh (அக்மால் சாலே) கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் சீராய்வு அமர்வு நான்குக்கு ஒன்று எனும் எண்ணிக்கையில் நஜிப்பின் மனுவைத் தள்ளுபடி செய்த வேளையில், சபா, சரவாக்கிற்கான தலைமை நீதிபதி Abdul Rahman Sebli (அப்துல் ரஹ்மான் செப்லி) நஜிப்பிற்கு நியாயமான நீதி கிடைக்கவில்லை என்பதால் அவரை விடுதலை செய்ய வேண்டுமென தீர்ப்பளித்திருந்தார்.
இதனை அடிப்படையாக வைத்து அரசு நஜிப்பின் வழக்கு சம்பந்தமான அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டுமென அக்மால் கோரிக்கை விடுத்துள்ளார்.
2020 ஜுலை மாதம் எஸ்ஆர்சி வழக்கில் நஜிப்பிற்கு நீதிபதி நஸ்லான் கஸாலி 12 ஆண்டு சிறையும் 21 கோடி அபராதத்தையும் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles