25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சீராய்வு மனுவில் ஒரு நீதிபதியின் தீர்ப்பானது மொத்த தீர்ப்பினையும் பாதிக்காது

🔥 Views : 5
👁 Reading Now : 48
Former Malaysian Prime Minister Najib Razak arrives at Court of Appeal in Putrajaya, Malaysia April 5, 2021. REUTERS/ Lim Huey Teng

🔊To listen to this news in Tamil, Please select the text.

நஜிப் ரசாக்கின் கூட்டரசு நீதிமன்ற சீராய்வு மனுவின் மீதான தீர்ப்பில் நான்கிற்கு ஒன்று எனும் கணக்கில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அது அவருக்கு அளிக்கப்பட்ட இறுதி வாய்ப்பாகும் என வழக்கறிஞர் மன்றத் தலைவர் Karen Cheah Yee Lynn (கேரன் சியா) தெரிவித்தார்.
நான்கு நீதிபதிகள் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று தீர்ப்பளித்த வேளையில், ஒருவர் அதற்கு எதிராக, நஜீப்பிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதால், அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார்.
ஒருவர் மட்டுமே மொத்தத் தீர்ப்புக்கு எதிராகக் கருத்து கூறியிருப்பது நீதித் துறையில் எடுபடாது என்றும் அதனை வைத்து தற்போது பலர் நஜிப் மேலுமொரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய முடியும் என்றும் அவரது வழக்கை மீண்டும் ஒரு முறை மறு விசாரணை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவது தவறான முன்னுதாரணம் என கேரன் சியா குறிப்பிட்டார்.
நஜிப்பின் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், 5 பேரடங்கிய மேல் முறையீட்டு நீதிபதிகள், கூட்டரசு நீதிபதிகள் ஐவர், சீராய்வு மனுவின் நீதிபதிகள் 5இல் நால்வர் நஜிப் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருப்பது நியாயமான தீர்ப்பு என்றும் அதில் நஜிப்பிற்கு முறையான வாய்ப்பு தரப்பட்டுள்ளதே உண்மையாகும்.
எனவே, நஜிப் மேலுமொரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறுவது தவறான கருத்து என்றும் கேரன் சியா குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles