
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூரில் இரு முக்கிய திட்டங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டிருப்பதை அன்வார் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென கிரீன் பார்ட்டி மலேசியாவின் தலைமைச் செயலாளர் Abdul Razak Ismail (அப்துல் ரசாக் இஸ்மாயில்) கேட்டுக் கொண்டார்.
அண்மையில் சிலாங்கூர் அரசு ஷா ஆலம் விளையாட்டு அரங்கையும் மிட்வேளி சிட்டியிலிருந்து போர்ட் கிள்ளான் வரை கிள்ளான் ஆற்றை அகலப் படுத்தும் திட்டத்தையும் நேரடிக் குத்தகைகளாக மலேசியன் ரிசோர்ஸஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
அந்த இரு திட்டங்களும் மிக அதிக செலவிலான திட்டங்கள் என்றும் அதற்கு 14 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியை அனுப்பியிருந்தும் மேற்கண்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பி இருப்பதாகக் குறிப்பிட்டு, அத்திட்டங்களுக்கு வெளிப்படையான டெண்டர் மூலம் குத்தகை விட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.



