
🔊To listen to this news in Tamil, Please select the text.
தமது இரண்டாவது வங்கிக் கணக்கில் இருந்த பணம் 2 லட்சம் ரிங்கிட் 20தே நிமிடத்தில் இணையதள வசதியின் மூலம் மீட்டுக் கொள்ளப் பட்டதாக பிரபலா வழக்கறிஞர் Manjeet Singh Dhillon (மஞ்சீட் சிங் டில்லன்) குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தப் பண மீட்பு தமது அனுமதியின்றி நடந்துள்ளதால் அந்தப் பணத்தை HSBC Bank Malaysia Bhd தமக்குத் திருப்பித் தருவதோடு தமக்கு நேர்ந்த மன அழுத்தத்திற்கு 2 லட்சத்தை இழப்பீட்டாக வழங்க வேண்டுமென வழக்கறிஞர் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
தமது வங்கிக் கணக்கில் வட்டியோடு சேர்த்து 206,628.50 ரிங்கிட் இருந்தாகவும் கடந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி மதியம் 2.31 லிருந்து 1.51 மணி வரை, 20தே நிமிடத்தில் 12 முறை அதிலிருந்து 2 லட்சம் ரிங்கிட்டை மூன்றாம் தரப்பு ஒன்று மீட்டிருப்பதாகவும், அதனை வங்கி தமக்குத் தெரிவிக்காமல் நடந்துள்ளதாக 80 வயதான, வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரான மஞ்சீட் சிங் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு முறையில் ஆன் லைனில் மீட்கும் தொகையின் வரம்பு தமக்கு அறிவிக்கப்படாமலேயே உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, தமது அனுமதியின்றி வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட 2 லட்சத்தோடு, இழப்பீடாக 2 லட்சத்தையும் வங்கி தமக்குச் செலுத்த வேண்டுமென அவர் வழக்க்கைத் தொடர்ந்துள்ளார்.



