29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

உதவிநிதி பெற்ற சமையல் எண்ணெயில் முறைகேடு:ஹம்ஸா ஸைனுடின் மகன் மீது வழக்கு

🔥 Views : 7
👁 Reading Now : 23

🔊To listen to this news in Tamil, Please select the text.

உதவிநிதி பெற்ற சமையல் எண்ணெயில் முறைகேடு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் Hamzah Zainudin (ஹம்ஸா ஸைனுடின்) மகன் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
Rimba Merpati Sdn Bhd (ரிம்பா மெர்பாத்தி) நிறுவனத்தின் இயக்கநராக இருக்கும் ஹம்ஸாவின் புதல்வர் Muhammad Faisal Hamzah (முகமட் ஃபைசால் ஹம்ஸா), Azizul Abdul Halim (அஸிஸுல் அப்துல் ஹலிம்) ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வர்த்தக உரிமத்தைத் கொண்டு, போலி பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி, உதவிநிதி வழங்கப்பட்ட சமையல் எண்ணெயை சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு விற்றாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தக் குற்றமானது 1961ஆம் ஆண்டு கட்டுப்பாடு, விநியோகச் சட்டத்தின் பிரிவு 8(4)க்கு முரணாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும், அனுமதியின்றி 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான சமையல் எண்ணெயை வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles