26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நீதிமன்றத்தை அவமதித்த லோவின் முன்னாள் கணவருக்கு 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

🔥 Views : 6
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிள்ளைகளின் மத மாற்ற சிக்கலில் சம்பந்தப்பட்டுள்ள Loh Siew Hong (லோ சியூ ஹோங்) என்ற மாதுவின் முன்னாள் கணவர் முகமட் நாகேஸ்வரன் முனியாண்டிக்கு உயர்நீதிமன்றம் 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
2019 மார்ச் 31ஆம் தேதி, தமது அனுமதியின்றி 3 பிள்ளைகளை மதம் மாற்றிய நாகேஸ்வரன் மீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க லோ கோரியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றத் தவறிய அவருக்கு இந்தத் தண்டனையை உயர்நீதிமன்ற நீதிபதி Evrol Mariette Peters (எவ்ரோல் மாரியெட் பீட்டர்ஸ்) விதித்தார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், நாகேஸ்வரனுக்கு இரு வார சிறைத் தண்டனையை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
பெர்லிஸ் சமூல நல இலாகாவின் கீழ் வைக்கப்பட்டிருந்த 3 பிள்ளைகளை லோவின் பராமரிப்பில் விட கடந்தாண்டு பிப்ரவரி 21ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்துகளாப் பிறந்து, வாழ்ந்த லோவின் சியூ ஹோங்கின் 3 பிள்ளைகளைத் தந்தை நாகேஸ்வரன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெர்லிஸ் சமய விவகார இலாகா அவர்களை மதம் மற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles