
🔊To listen to this news in Tamil, Please select the text.
2023ஆம் ஆண்டில் பள்ளிகள் திறந்த பின்னர் கோவிட்-19 தொற்றினால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ Noor Hisham Abdullah (நூர் ஹிசாம் அப்துல்லா ) கவலை தெரிவித்தார்.
கடந்த வாரம் தொற்றின் எண்ணிக்கை 2,228 ஆக இருந்த வேளையில், அது இவ்வாரம் 3,089 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், பள்ளி விடுமுறையின் போது, மக்கள் அதிகமான நடமாடியதை அடுத்து கோவிட் தொற்று அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளின் பதிவின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு 24.1 விழுக்காடாக இருப்பதாகவும் கோவிட் தொற்றின் பிரிவு ஒன்றின் எண்ணிக்கை 80 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.
கண்டு பிடிக்கப்பட்ட 17 திரளைகளில் 11 கல்விக் கழகங்களில் இருந்து பரவியுள்ளன. நாடு முழுமையும் பள்ளிகள் மார்ச் 19, 20 ஆம் தேதிகளில் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



