
🔊To listen to this news in Tamil, Please select the text.
நேயர்கள்-வாசகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும்
ஏஎஸ்டி செய்தித் தளம் புனித வெள்ளி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது.
கலிலேய நாட்டில் வாழ்ந்த யூதக் குடியினரான ஏசு நாதரின் பிறப்பை ஒட்டித்தான் உலகின் பெரும்பாலான நாடுகளும் மக்களும் ஆண்டுப் பிறப்பை கணக்கிட்டு வருகின்றனர்.
அத்தகைய பெருமைக்குரிய ஏசுநாதர், யூத சமயத் தலைவரும் அன்பான போதகரும் ஆவார். உலகத்தில் அதிகமான மக்கள் பின்பற்றும் கிறிஸ்துவ சமயத்தின் நடுநாயகமும் இவர்தான்.
நலிந்த மக்களுக்கு அன்பினால் அடைக்கலம் அளித்து, நோயாளிகளைக் குணப்படுத்தி, பாவம் செய்தவர்களுக்கு மன்னிப்பும் அளித்து வந்ததால் மக்களை இவரைப் பின்பற்றத் தொடங்கினர். இதனால், ஆற்றாமை கொண்ட யூத அதிகாரிகள் ஏசுவைக் கைதுசெய்து ரோமானிய ஆட்சியர் பிலத்துவின் முன் நிறுத்தினர். பின், ஏசுநாதரை சிலுவையில் அறைந்தனர்.
மக்களுக்காக பாடுற்று, சிலுவையில் ஏசு பிரான் உயிர்விட்ட அந்த நாள், புனித வெள்ளியாக ஆண்டுதோறும் கிறிஸ்துவ சமயத்தினால் போற்றப்படுகிறது.
அனைவருக்கு புனித வெள்ளி வாழ்த்து!



