
🔊To listen to this news in Tamil, Please select the text.
பூர்வீகக் குடிகளுக்காக ஒதுக்கப்பட்ட காட்டில் மூன்றாம் தரப்பினர் அத்துமீறி நுழைந்து காட்டை அழித்து, தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கவே ஜொகூர் சுல்தானின் உத்தரவின் பேரில், காடுகளை மாநில சுல்தான் பரம்பரையிலான நிலம் என பதிவு செய்யப்படுவதாக மந்திரி பெசார் Onn Hafiz Ghazi (ஓன் ஹாஃபிஸ் காஸி) சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
அந்தக் காட்டுப் பகுதிகள் தொடர்ந்து பூர்வகுடிகளின் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்யவே அதனை சுல்தான் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மாநில சுல்தான் அந்த நிலத்திற்கு பராமரிப்பாளர் என்ற நிலையில் மட்டுமே இருப்பார் என்றும் அந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் ஓன் ஹாஃபிஸ் தெரிவித்தார்.
அண்மையை காலமாக தனிநபர்கள் காடுகளை அழித்து செம்பனைப் பயிர்களைப் பயிரிட்டு வருவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
