
🔊To listen to this news in Tamil, Please select the text.
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவன ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ நஸ்லான் கசாலி, நீதிபதிகளுக்கான நெறிமுறையை மீறியுள்ளதாகவும் அவரிடம் கருத்து முரண் இருந்ததாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கண்டறிந்துள்ளதாக சட்ட அமைச்சர் அஸாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில், மார்ச் 20-இல் டத்தோஸ்ரீ நஜீப்பின் வழக்கறிஞர் ஷாஃபீயின் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அஸாலினா ஒத்மான் குறிப்பிட்டுள்ளார்.
நிதிபதி நஸ்லான், நீதிபதிகளுக்குரிய நெறிமுறையில் இருந்து வழுவியுள்ளதாகவும் கருத்து முரண்பாடு வெளிப்பட்டுள்ளதாகவும் மலேசிய உழல் தடுப்பு ஆணையம் கண்டறிந்துள்ளது என்று இதன் தொடர்பில் சட்ட அமைச்சகத்திற்கு கடந்த பிப்ரவரி 20-இல் அனுப்பிய கடித்தத்தில் இந்த ஆணையம் தெரிவித்திருந்தது என்று அவர் மேலும் சொன்னார்.



