
🔊To listen to this news in Tamil, Please select the text.
தங்களின் அரசியல் பிழைப்புக்காக சில தரப்பினர் மலாய்க்காரர்களின் ஒற்றுமையை விரும்பாமல் இடைஞ்சல் செய்வதாக துன் மகாதீர் குற்றம் சாட்டினார்.
அரசின் நிதி, லஞ்சப் பணத்தையும் இவர்கள் வாக்குகளைப் பெற பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று, மேலும் மேலும் கள்ளப் பணத்தைச் சேர்த்து தங்களின் ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் வளம் பெற உதவுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
எல்லா இனங்களுக்கும் சரி சமாமான வாய்ப்பைத் தர, இவர்கள் மலாய்க்காரர்களைப் பிரித்தாள நினைப்பதாகவும், மலாய்க்காரர் அல்லாதோரின் வாக்குகளை நம்பியே தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கவும் எண்ணுகின்றனர்.
இம்மாதிரியான மனப்போக்கு நீடித்தால், மலாய்க்காரர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வாழ நேரிடும் என்றும் மகாதீர் நகையாடினார்.



