
🔊To listen to this news in Tamil, Please select the text.
தாம் மீண்டும் பெர்சத்துவில் இணைய விண்ணப்பித்திருப்பதாக மாச்சாங் எம்பி Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal கூறியிருப்பது அபாண்டமான பொய் என அம்பாங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Zuraida Kamaruddin (ஸுரைடா கமாருடின்) தெரிவித்தார்.
தாம் பெரிக்காத்தானுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் ஆனால், அதில் மீண்டும் சேர எண்ணமில்லை என்ற தமது எண்ணத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, அமாட் ஃபைஸால் தம்மீது அவதூறு கூறுவதாகக் குறிப்பிட்ட ஸுரைடா, அவர் தமது நாவை அடக்கி வாசிக்க வேண்டுமென சாடினார்.
ஸுரைடா பிகேஆரின் உதவித் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்த பின்னர், 2020இல் ஷெரட்டன் நகர்வினை அடுத்து, அஸ்மின் அலியோடு பெர்சத்துவில் இணைந்து, தொடர்ந்து இஸ்மாயில் சப்ரி அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்து வந்துள்ளார்.
அதன் பின்னர், பார்ட்டி பங்சா மலேசியாவில் (பிபிஎம்மில்) இணைந்து, 15ஆவது பொதுத்தேர்தலில் அம்பாங் தொகுதியில் போட்டியிட்டு, 4,589 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். அக்கட்சியில் தலைமைத்துவப் போராட்டத்தில் சிக்கி, கடந்த டிசம்பரில் மாதம் அதிலிருந்து நீக்கப்பட்டு இப்போது கட்சி எதுவும் இல்லாமல் அனாதை போல செயல்படுகிறார்.



