31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மனிதவள அமைச்சு மேற்கொண்ட அதிரடி சோதனையில் 226 வெளிநாட்டு தொழிலாளர்கள் மீட்பு

🔥 Views : 7
👁 Reading Now : 59

🔊To listen to this news in Tamil, Please select the text.

வேலைக்காக அழைத்து வரப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட 226 வெளிநாட்டு தொழிலாளர்களை மனித வள அமைச்சின் ஆள்பல இலாகா மீட்டுள்ளது. நெகிரி செம்பிலான் Bandar Baru நீலாயில் மூன்று மாடி கட்டிடத்தில் உள்ள 9 அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த வங்களாதேசத்ம் மற்றும் நேப்பாளத்தைச் சேர்ந்த அந்த தொழிலாளர்கள் நேற்று மீட்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார். வங்காளதேச தூதரகம் செய்திருந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையில் அந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மின்சார வசதி மற்றும் முறையான தங்குமிட வசதியின்றி ஒரு அறையில் 60 பேர்வரை கடந்த 40 நாட்களுக்கும் மேல் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். அதோடு அவர்களை இங்கு கொண்டு வந்த நிறுவனம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு எதனையும் ஏற்படுத்தித்தரவில்லை. மீட்கப்பட்ட அவர்கள் அனைவரும் தற்போது தற்காலிக இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிவக்குமார் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles