29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

காய்கறி விவசாயி மோசடியில் சிக்கி RM790,000 பறிகொடுத்தார்

🔥 Views : 9
👁 Reading Now : 46

🔊To listen to this news in Tamil, Please select the text.

போலீசாரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயம் காரணமாக, கேமரன் மலையிலுள்ள, காய்கறி விவசாயி ஒருவர், ஏழு லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட்டை இழந்தார்.

போலீஸ் அதிகாரியை போல பாவனை செய்து மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் அவரை ஏமாற்றி சென்றதாக கூறப்படுகிறது.

ஜூன் 19-ஆம் தேதி, பொருட்களை அனுப்பும் நிறுவனத்தை சேர்ந்தவர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரிடமிருந்து அந்த 54 வயது விவசாயி தொலைப்பேசி அழைப்பை பெற்றுள்ளார்.

விவசாயின் முகவரிக்கு அனுபப்பட்ட பொட்டலம் ஒன்றில், கடன்பற்று அட்டை, அடையாள அட்டை மற்றும் கடப்பிதழ் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவரை போலீஸ் அதிகாரி என கூறப்பட்ட நபர் ஒருவருடன் பேச தொடர்பை ஏற்படுத்தி தந்துள்ளார்.

சட்டவிரோத பணமாற்று நடவடிக்கை தொடர்பில், தமக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நபர் கூறவே அஞ்சமடைந்த விவசாயி, விசாரணைக்காக அந்நபர் கூறியதை போல, தம்மிடம் இருந்த பணத்தை, அந்நபர் வழங்கிய ஐந்து வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

எனினும், அதன் பின்னர் அந்நபரை தொடர்புக் கொள்ள முடியாமல் போகவே, அச்சம்பவம் தொடர்பில் நேற்று அவர் போலீஸ் புகார் செய்ததாக, பஹாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles