
🔊To listen to this news in Tamil, Please select the text.
மஇகா அனைத்து இன மக்களுக்கான அரசியல் கட்சி. அதனால் தான் மஇகா புதிய கட்டிட அடிக்கல்நாட்டு விழா நிகழ்வில் அனைத்து சமய போதகர்களும் இருந்தனர். அவர்கள் அவரவர் மத அடிப்படையில் பிரார்த்தனை செய்தார்கள்.
இதை ஏன் சர்ச்சையாக்குகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என அக் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கேள்வி எழுப்பினார்.
மஇகா புதிய தலைமையகத்தின் அடிக்கல் நாட்டு விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்து சமய பாரம்பரியத்தின் அடிப்படையில் குருக்களை கொண்டு இந்த பூஜை நடைபெற்றது.
அதே வேளையில் சொல்லமுது கம்பம் பீர் முஹம்மது பாகவி அவர்கள் துவா ஓதினார். அதே போன்று பாதிரியார் ஒருவரும் ஜெபம் பாடினார்.
மஇகா என்பது பல இன, சமய மக்களை கொண்டு கட்சி. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தான் இக் கட்சி.
அப்படிப்பட்ட கட்சியின் புதிய தலைமையக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் அவர்களின் சார்பில் அனைத்து சமய அங்கங்கள் இல்லாமல் போனால் தான் தவறு.
இருந்தால் எந்த தவறும் இல்லை என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
மஇகாவின் அடிக்கல் நாட்டு விழாவில் மௌலவி கம்பம் பீர் முஹம்மது பாகவி துவா ஓதியதை ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சித்து வருகின்றனர்.
அவதூறு பரப்பும் அவர்களின் இந்த செயல் வருத்தத்துக்குரியது என்று அவர் கூறினார்.
