
🔊To listen to this news in Tamil, Please select the text.
தீபாவளியை முன்னிட்டு நிறைய கடைகள் போடப்பட உள்ளது. எக்ஸ்போ நிகழ்ச்சியும் ஆங்காங்கே நடைபெற உள்ளது. இதற்கு தமிழகத்தில் இருந்து வியாபாரிகளை கொண்டு வந்து இங்கு வியாபாரம் செய்ய சில நிறுவனங்கள் உதவி செய்கிறது. இந்த ஆண்டு புதிய அரசாங்கத்தில் இது முற்றிலும் தவிர்க்கப்படும் முழுக்க முழுக்க உள்ளூர் வியாபாரிகளுக்கு தான் இங்கு வியாபாரம் செய்வதற்கு முதலிடம் தரப்படும். மனித வளஅமைச்சர் சிவகுமாரிடமும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியிடமும் தெளிவாக என் விளக்கத்தை கூறியுள்ளேன். மலேசியா வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். தீபாவளி வியாபாரம் தான் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது அதனால் உள்ளூர் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு இங்கு முதலில் இடம் கொடுங்கள் என்று மைக்கி தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்
