
🔊To listen to this news in Tamil, Please select the text.
முன்னாள் தேசிய தடகள வீராங்கனையான மெலிண்டர் கவுரின் மகளான ஜாக்குலின் கவுர், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாமை அடைந்த இளம் மலேசியர் என்ற பெருமையுடன் மலேசிய சாதனை புத்தகத்தில் பெயர் பதித்துள்ளார். அவருக்கு வயது 9.
அந்த பயணத்தின் போது, ஜாக்குலினுடன் இருந்த மெலிண்டர், வெள்ளிக்கிழமை தனது மகளின் அந்த சாதனை தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“Everest Base Camp” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய பாறையின் முன் அவர்கள் நிற்கும் காட்சியை அந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.
அது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், மெலிண்டரின் பதிவை, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததன் வாயிலாக, ஜாக்குலினின் சாதனையை, மலேசிய சாதனை புத்தகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜாக்குலினும் அவரது குழுவினரும் எவரெஸ்ட் அடித்தள முகாமை அடைய ஐந்து நாட்கள் பிடித்ததாக கூறப்படுகிறது.
தனது தாயை பின்பற்றி சாதனை படைக்க விரும்புவதாக இதற்கு கும் ஜாக்குலின் கூறியிருந்தார்.
நாட்டின் முன்னாள் தடகள வீராங்கனையான மெலிண்டர் ஐந்து தேசிய சாதனைகளை பதிவுச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



