33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மறைந்தும் மறையாத மாமணியாக துன் சாமிவேலு

🔥 Views : 6
👁 Reading Now : 61

🔊To listen to this news in Tamil, Please select the text.

ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவரும் முன்னாள் பொதுப் பணி அமைச்சருமான துன் ச. சாமிவேலு அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ,செப்டம்பர் 15 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக மறைந்தார். அவர் காலமாகி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவை எட்டியபோதிலும் ம.இ.கா மட்டுமின்றி இந்திய சமூகம் தொடர்பான அரசியல், சமயம் ,கல்வி மற்றும் பொருளாதாரம் போன்ற விவகாரங்களில் துன் சாமிவேலு அவர்கள் ஆற்றிய சேவைகளும், அர்ப்பணிப்பும் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கம்பீரமான குரலும் , துணிச்சலும்,உழைப்பும் அரசியலில் மட்டுமல்ல பொதுவாகவே வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது.

அரசியலிலும் இதர பல்வேறு துறைகளிலும் அவர் ஆற்றிய சேவையும் பணிகளும் நமது எண்ணங்களிலிருந்து மறக்கமுடியாத நினைவாக இருக்கிறது. மலேசியாவில் இந்திய சமூகத்தின் வரலாறில் துன் சாமிவேலு என்றும் மறைந்தும் மறையாத மாமணியாக இருப்பார் என்பது உறுதியாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles