32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

கணபதி குடும்பத்திற்கு நீதி கிடைக்க போராடுவோம்!

🔥 Views : 9
👁 Reading Now : 21

காவல் துறை தடுப்பு காவலில் பரிதாபமாக உயிரிழந்த சகோதரர் கணபதி குடும்பத்தினரை செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வில்லியம் லியோங், மக்கள் நீதி கட்சி தேசிய இளைஞர் படையின் உதவித் தலைவர் தீபன் சுப்ரமணியம், செலாயாங் தொகுதி உதவித் தலைவர் த ஆன்டி, கோலா சிலாங்கூர் தொகுதி இளைஞர் படை துனை தலைவர் சிவபாலன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர்.

கணபதிக்கு நடந்த இந்த அநீதிக்கு நியாயம் கேட்கும் அவரது குடும்பத்தினரின் போராட்டத்தில் மக்கள் நீதி கட்சி உறுதுணையாக இருக்கும். அதை வேளையில் இதன் தொடர்பாக விசாரணை துவங்குவதற்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று மாண்புமிகு வில்லியம் தெரிவித்தார்.

கணபதி குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வண்ணம் காவல் துறையின் தலைவர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் அவர்கள் நேற்று நெருக்குதல் விடுத்தார். அதனை தொடரந்து இன்று கணபதி அவர்களுடைய குடும்பத்தினருடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles