
🔊To listen to this news in Tamil, Please select the text.
புக்கிட் மெர்தாஜம், அல்மாவில் ஆலயத்திற்கு முன் கைகலப்பில் ஈடுபட்டதன் தொடர்பில் மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த மூவரும் நேற்று தொடங்கி நான்கு நாட்களுக்கு விசாரணைக்கு உதவியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டைச் சேர்ந்த 21 முதல் 25 வயதுடைய அந்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஆலயத்திற்கு முன் கைது செய்யப்பட்டதாக செபெராங் பிறை தெங்கா மாவட்டத்தின் துணை கமிஷனர் தான் செங் சான் தெரிவித்தனர். இரண்டு கும்பலுக்கிடையே நடைபெற்ற கைகலப்பு தொடர்பான 27 மற்றும் 14 வினாடிகள் கொண்ட இரண்டு வீடியோ காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. செப்டம்பர் 17 ஆம் தேதி நள்ளிரவு மணி 12.05 அளவில் அந்த ஆலயத்தின் திருவிழாவின்போது இரு கும்பல்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.



