29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

நாட்டின் செல்வத்தை மீட்பதில்தான் எங்களின் கவனம் இருக்கிறது – MACC ஆணையர் அசாம் பாக்கி

🔥 Views : 8
👁 Reading Now : 33

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அதன் தகவல்கள் கசிவதைக் குறைப்பது மற்றும் நாட்டின் செல்வத்தை மீட்டெடுப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று அதன் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார்.

MACC தற்போது ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், கசிவுகளைக் குறைப்பதற்கும் நவீன மற்றும் தொழில் நிபுணத்துவ அணுகுமுறையைக் பின்பற்றி வருவதோடு , அதன் செயல்பாட்டில், அரசாங்க சொத்துக்கள் மற்றும் நிதிகளை மீட்டெடுப்பதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

IBI எனப்படும் புலனாய்வு அடிப்படையிலான விசாரணை முறையைப் பயன்படுத்தி பதவிகளில் உள்ளவர்கள் அல்லது உயர் பதவியில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட வழக்குகளை விசாரிப்பதற்கான ஒரு நுட்பத்தை ஆணையம் பயன்படுத்தி வருகிறது.

முறையான விசாரணைகளுக்கு முன் இது உயர்மட்ட ஊழல் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, அதன்பின் சொத்துகளை மீட்டெடுப்பதில் தொடங்குகிறது. அதில் சொத்துக்கள் அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படும்.

இந்த IBI முறையால் பெரும் ஊழலை வெளிக்கொணர முடியும்” என்று அண்மையில் MACC தலைமையகத்தில் MACCயின் 56வது ஆண்டு விழாவையொட்டி அளித்த சிறப்பு பேட்டியில் அசாம் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles