
🔊To listen to this news in Tamil, Please select the text.
பேரா – பகாங் எல்லைக்கு அருகேயுள்ள ஆற்றில் ஆடவர் ஒருவரின் உடல் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த உடல் கண்டுப்பிடிக்கப்பட்ட பகுதி கரடு முரடாக இருப்பதால் அந்த உடலை உடனடியாக அங்கிருந்து மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஹெலிகாப்டர் மூலமாக அந்த சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு அடையாளம் காணும் நடவடிக்கைக்காக கேமரன் மலை சுல்தானா ஹாஜா கல்சோம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படும் என கேமரன் மலை மாவட் போலீஸ் தலைவர் DSP அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.
இதனிடையே கேமரன் மலை, தானா ராத்தாவில் குனுங் ஜாசார் மலையேறியபோது செப்டம்பர் 22 ஆம்தேதி காணாமல்போன இந்திய மலையேறியை தேடும் நடவடிக்கை பேரா எல்லையில் விரிவுபடுத்தப்படும் என அஸ்ரி ரம்லி கூறினார்.
44 வயதுடைய நந்தன் சுரேஷ் நட்கர்னி காணாமல்போனதை தொடர்ந்து அவரை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.



