
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் உள்ள இந்திய தொழில்முனைவோருக்கு அரசாங்கத்தின் முன்முயற்சிகள் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கான ஒரு செயலகத்தை அமைப்பது குறித்து தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு பரிசீலிக்கும் என அதன் நினையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்திருக்கிறார். இந்திய சமூக தொழில்முனைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வின்போது அந்த பரிந்துரை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அரசாங்கத்தின் பல்வேறு முன்முயற்சிகளைப் பரப்புவதற்கான ஆதரவு நடவடிக்கைகள் குறைவாக இருப்பது அமைச்சு எதிர்கொள்ளும் ஒரு தீவிரமான பிரச்சனையாகும் . அதோடு இந்திய சமூக தொழில்முனைவோர் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு ஒரே இடத்தில் செயல்படக்கூடிய ஒரு செயலகத்தை அமைப்பதற்கான முன்மொழிவை நாங்கள் பெற்றுள்ளோம். அமைச்சு மற்றும் அங்காசா ஏற்பாடு செய்த கூட்டுறவு கருத்தரங்கு மற்றும் இந்திய சமூக தொழில்முனைவோருக்கான கலந்துரையாடல் நிகழச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார். செயலற்ற கூட்டுறவுகளை மீண்டும் செயல்படுத்துதல் மற்றும் இந்திய தொழில்முனைவோருக்கு தகவல்களை வழங்குவதற்கான ஒருமுக மையமாக செயல்படுவதற்கு செயலகம் அமைக்கும் ஆலோசனையையும் நாங்கள் பெற்றுள்ளோம் என சரஸ்வதி கூறினார் .



