
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்திலுள்ள தமிழப்பள்ளிகளில் இருக்கும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்வு காண்பதற்கு தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு திட்டக்குழு அமைக்கப்பட்டுள்தாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். இந்த குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள 15 தமிழ்ப்பள்ளிகளுக்கும் வருகை புரிந்து அங்குள்ள பிரச்சனைகளை அடையாளம் காண்பார்கள். இதுவரை அந்த குழு 9 தமிழ்ப்பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ளதாக அவர் கூறினார். கூட்டரசு பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அனைவருமே ஒன்றுமை அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். அப்படியிருந்தும் அவர்களது தொகுதிகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பிரன்னைகள் குறித்து அந்த தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லவில்லை என்ற தகவலையும் தாம் அறிந்துள்ளதாக பிரபாககரன் தெரிவித்தார். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 38 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல பள்ளிகளில் அதிக மாணவர்கள் இருக்கலாம். அப்படிப்பட்ட பள்ளிகளில் விரிவாக்க கட்டடம் தேவைப்படும். அதே வேளையில் வேளையில் கூரையை பழுதுபார்ப்பது , நூல் நிலையங்களை நிர்மாணிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு அரசாங்கம், கல்வி அமைச்சு மற்றும் பிரதமர்துறையின் பொருளாதர திட்டப் பிரிவு, மித்ரா போன்ற அமைப்புகளின் உதவியை நாடும் திட்டத்தையும் கூட்டரசு பிரதேச தமிழப்ப்பள்ளி மேம்பாட்டுக் குழு ஈடுபடும்.
விரைவில் இக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து கூட்டரசு பிரதேசத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்தும் என பிரபாகரன் தெரிவித்தார்.



