
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூரில் ஆடவர் ஒருவர் தோளில் பூனையுடன் KLSCM எனப்படும் மாராத்தோனில் கலந்து கொண்ட காணொளி டிக் டோக்கில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அபேக் எனப்படும் அந்நபர் பூனையை தனது தோளில் லாவகமாக அமர்த்தி பத்து கிலோமீட்டர் ஓடியுள்ளார்.
பார்வையாளர்கள் இதனை கண்டு ஆச்சரியபட்டதாக இந்த காணொளியை பதிவிட்டிருந்தவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்போட்டியில் இவர்கள் ஏற்கனவே பங்கெடுத்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இணையதளாசிகளின் பாராட்டையும் மதிப்பையும் இவர்கள் பெற்று வருகின்றனர்.



