
🔊To listen to this news in Tamil, Please select the text.
திரெங்கானு கெமாமான் இடைத்தேர்தலில் மகாதீர் பாஸ் பாஸ் கட்சியின் வேட்பாளராக மகாதீர் நிறுத்தப்படுவார் என வெளிவந்த தகவலை அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் மருத்திருக்கிறார். அது தவறான ஆருடம் என கூறியதோடு பாஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் செயல்திறனை முறையாக கவனித்து விமர்சனங்களை முன்வைக்க அரசியலில் நீண்டானுபவம் கொண்ட மகாதீர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது சரியான தேர்வாக அமையும் என பாஸ் கட்சியின் வட்டாரத்தை மேற்கோள்காட்டி நேற்று ஒரு செய்தி வெளிவந்திருந்தது.
அது தொடர்பில் கருத்துரைத்த துவான் இப்ராஹிம் இவ்வாறு பதிலளித்தார்.



