28.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

புதியதாக 9,500 ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும்: டத்தோ நெல்சன்

🔥 Views : 9
👁 Reading Now : 69

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டில் புதியதாக 9,500 ஆசிரியர்கள் வரும் டிசம்பர் மாதத்தில் பணியை தொடங்கவுள்ளனர்.

இப்புதிய ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று மஇகா கல்விக் குழுத் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் கூறினார்.

நாடு தழுவில் நிலையில் ஆசிரியர்கள் பற்றக்குறை பிரச்சினை நிலவி வருகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வுக் காணும் வகையில் வரும் டிசம்பர் மாதம் 9,500 ஆசிரியர்கள் பணியை தொடங்கவுள்ளனர்.

அவர்களுக்கான நேர்முக தேர்வும் முடிந்து விட்டதாக கல்வியமைச்சர் அறிவித்திருந்தார்.

புதிய ஆசிரியர்கள் பணியை தொடங்கவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

அதே வேளையில் இப்புதிய ஆசிரியர்களால் தமிழ்ப்பள்ளிகளின் தேவையை பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு எத்தனை ஆசிரியர்கள் என்பதை மேலவை நேரத்தின் போது கேள்வி எழுப்புவேன்.

சன்பெங் தமிழ்ப்பள்ளியின் 96ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைத்த பின் டத்தோ நெல்சன் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

சன்பெங் தமிழ்ப்பள்ளி நூற்றாண்டு விழாவை கொண்டாடவுள்ளது. இப்பள்ளியில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து பள்ளியின் தலைமையாசிரியை பாக்கியலட்சுமி கூறினார்.

அப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles