28.5 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

மலேசியாவிற்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு கம்போடியா தயார்

🔥 Views : 11
👁 Reading Now : 53

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசியாவிற்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு கம்போடியா தயாராய் இருப்பதாக அந்நாட்டின் விவசாய, காட்டுவள மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டித் தீனா தெரிவித்திருக்கிறார். அவர் நேற்று மலேசிய விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபுவுடன் நடத்திய பேச்சின்போது இந்த உறுதியை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது கம்போடியாவில் விவசாயத்துறையில் முதலீடு செய்வதற்கு மலேசியா முன்வர வேண்டும் என்றும் டித் தீனா அழைப்பு விடுத்தார். கம்போடியாவின் அரிசி மலேசியாவில் ஏற்றுமதி செய்வதற்கும் அது குறித்து அறிமுகப்படுத்துவதற்காகவும் அவர் முகமட் சாபுவுடன் பேச்சு நடத்தினார். விவசாயத் துறையில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் அந்த இரு அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles