29.5 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

ஆதி குமனன் நூலுக்கு தொழிலதிபர் தண்ணீர் மலை செட்டியார் பாராட்டு!

🔊To listen to this news in Tamil, Please select the text.

புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் மலையாண்டி ஏற்பாட்டில் ஆதி குமரனனின் நூல் வெளியீடு காண உள்ளது. இதை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு மெட்ராஸ் கபே உணவகத்தில் நடைபெற்றது. அப்பொழுது தொழிலதிபர் தண்ணீர் மலை செட்டியார் பேசும்போது இந்த நூலுக்கு பக்க பலமாக என்னுடைய குடும்ப தெய்வம் டத்தோ ரெனா ராமலிங்கம் பல உதவிகளை செய்துள்ளார் அதை என்றும் மறக்க முடியாது என்றார். அதுபோல மலையாண்டி மிகவும் சிரமப்பட்டு இந்த நூலை அற்புதமாக தயாரித்து உள்ளார். அவரை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன் அவர் மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தொழில் அதிபர் தண்ணீர் மலை செட்டியார் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles