
🔊To listen to this news in Tamil, Please select the text.
எந்த ஒரு தரப்பும் புதிய கட்சியை தொடங்குவதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவோ இணக்கமோ தெரிவிக்கவில்லை என பிரதமர் துறை அமைச்சு வலியுறுத்தியிருக்கிறது.
பிரதமர் துறையின் அனுமதி இன்றி குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரதமரின் பெயரை தவறாக பயன்படுத்தப்படுவதை மிக கடுமையாக கருதுவதாக அது கூறியுள்ளது.
அப்படிபட்ட நடவடிக்கை பொறுப்பற்றதோடு பிரதமர் மற்றும் அரசாங்க நிர்வாகத்தின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என் அப்பிரதமர் துறை எச்சரித்திருக்கின்றது.
அது தொடர்பில் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கையை வெளியிடும் தரப்பினரின் செயல்பாடுகளில் மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் எனவும் அது வலியுறுத்தியிருக்கிறது.
கடந்த சனிக்கிழமை 500க்கும் மேற்பட்ட அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்ட ஒரு சந்திப்பில் 300க்கும் மேற்பட்டோர் இந்தியர்களுக்கென ஒரு புதிய கட்சி தொடங்கப்படுவது அவசியம் என கருத்து தெரிவித்திருந்ததாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தனர்.
அவ்விவகாரம் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
