28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

சுயநலமான வாகனமோட்டிகள் ; சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள், பயணத்தை தொடர முடியாமல் சிக்கித் தவிக்கும் RapidKL பேருந்து வைரல்

🔥 Views : 4
👁 Reading Now : 64

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசியர்கள் சிறப்பாக செய்யும் விஷயங்களில் ஒன்று, அவர்கள் விரும்பும் இடங்களில் வாகனங்களை நிறுத்துவது.

அது பெரும்பாலும் இதர சாலை பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதிலும், சாலை சந்திப்புகள் அல்லது வளைவுகளில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் சிக்கல்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அண்மையில், அதுபோன்ற சூழலில் சிக்கித் தவித்த, ரேபிட்கேஎல் (RapidKL) பேருந்து ஒன்றின் காணொளி, MYNEWSHUB X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வைரலாகியுள்ளது.

குறிப்பாக, சாலை சந்திப்பு ஒன்றின், இருமருங்கிலும், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், வளைப்பு எடுக்க முடியாமல் அந்த ரேபிட்கேஎல் பேருந்து சிக்கிக்கொண்ட காட்சிகள் அந்த காணிளியில் இடம் பெற்றுள்ளது.

“நிறுத்த கூடாது இடங்களில் வாகனங்களை நிறுத்தினால், இப்படிதான் நிகழும். சுயநலவாதிகள்” என அந்த காணொளியின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த பேருந்து சாலை சந்திப்பை கடந்து செல்ல முடியாமல், சாலையை மறித்து நின்றதால், அப்பகுதியில் சற்று நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மோசமடைந்த காட்சிகளும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.

சாலையின் இரு புறங்களிலும், வாகனத்தை நிறுத்திய வாகனமோட்டிகளுக்கு எதிராக, அதிகாரத்துவ தரப்பினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அந்த பதிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles