
🔊To listen to this news in Tamil, Please select the text.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமராக பதவி வகிக்க மஇகா முழு ஆதரவு வழங்குகிறது.
ஆனால் அடுத்த தேர்தலில் தொகுதிகள் அடிப்படையில் தான் மஇகா தனது ஆதரவை முடிவு எடுக்கும் அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.
சிலாங்கூர் மாநில மஇகாவின் 77ஆவது பேராளர் கூட்டத்தை தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சி.
மஇகாவை வலுப்படுத்த கிளைகளை சீரமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சிலாங்கூர் கிளைத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். இதுவே கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் சொந்த காலில் நிற்பதற்கான நடவடிக்கைகளை தான் மஇகா மேற்கொண்டு வருகிறது.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் கடன் இல்லாமல் செயல்படுகிறது. அதிகமான மாணவர்களுக்கு தற்போது அதன் வாயிலாக கல்வி நிதி, கடன் வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்து மஇகா தலைமையகம் பெரிய அளவில் மிகப் பெரிய அளவில் கட்டப்படவுள்ளது.
மஇகாவின் மருத்துவமனை, கல்லூரி விரைவில் கட்டப்படவுள்ளது.
இதன் மூலம் மஇகாவுக்கு சொந்தமாக வருமானம் வரும். இது கட்சிக்கு தான் தான் பலம் என்று அவர் கூறினார்.
மஇகா தற்போது ஒற்றுமை அரசாங்கத்திற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் முழு ஆதரவை தருகிறது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமருக்கான ஆதரவை தொடரும்.
ஆனால் அடுத்த தேர்தலில் தொகுதிகள் அடிப்படையாக இந்த ஆதரவை பற்றி மஇகா சிந்திக்கும்.
மஇகா அரசியல் ரீதியிலும் வலுவாக இருக்க வேண்டும் என்பதே இதற்கான நோக்கம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
