
🔊To listen to this news in Tamil, Please select the text.
மக்களவையில் பிரதமர் தாக்கல் 2024ஆம் ஆண்டுக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் பட்ஜெட்டைப் பாராட்டுக்கிறது.
மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் முதல் இல்லத்தரசிகள், கலைஞர்கள் வரை என அனைவரரையும் இலக்காக கொண்டு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.
பல நோக்கத்துடன் உள்ளடக்கியிருப்பது அனைத்து மலேசியர்களுக்கும் பயனளிக்கும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.
மித்ரா, தமிழ்ப் பள்ளிகள், வழிபாட்டு தளங்கள், சமூகப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஒதுக்கீடுகள் உட்பட இந்திய சமூகத்திற்காக முன்வைக்கப்பட்ட சில முன்மொழிவுகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்தில் கொண்டு உரிய நிதியை ஒதுக்கியுள்ளார்.
இந்த ஒதுக்கீடுகளின் நியாயமான, சமமான அமலாக்கம், பயன்பாட்டை உறுதி செய்வது இப்போது முக்கியமானதாக உள்ளது.
அதன் அடைப்படையில் இந்த விவகாரங்களை மேற்பார்வையிட இந்தியர் மேம்பாட்டுக் குழுவை அமைக்கப்பட வேண்டும் என்று கணபதிராவ் கூறினார்.
பட்ஜெட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் 1.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்ப்பள்ளிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மித்ராவின் கீழ் மொத்தம் 100 மில்லியன் ரிங்கிட், தெக்குன் கீழ் இந்தியர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இல்லங்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சிறப்பு ஒதுக்கீடுகள் குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு அமைச்சகத்திலும் இந்தியர்களுக்கு அணுகக்கூடிய பல வாய்ப்புகள், ஒதுக்கீடுகள் உள்ளன என நான் நம்புகிறேன்.
அதே வேளையில் பட்ஜெட்டில் உள்ள பயன்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கும் உண்மையில் நிதி தேவைப்படுபவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று கணபதிராவ் கூறினார்.
