
🔊To listen to this news in Tamil, Please select the text.
சனிக்கிழமை இரவு 11.40 மணியளவில் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் லெக்கிர் டோல் சாவடியை கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தீப்பற்றியதில் கார் ஓட்டுனர் தீக்கிரையாகி மரணமுற்றார்.
சங்காட் செர்மினிலிருந்து தெலுக் இந்தானை நோக்கி வந்த அந்த கார் டோல் சாவடியை நெருங்கியபோது இன்னும் அடையாளம் தெரியாத நபரால் ஓட்டப்பட்ட அந்தக் கார் திடிரென கட்டுப்பட்டை இழந்த அந்தக் கார் தடத்திலிருந்து விலகி டோல் சாவடியை நேருக்கு நேர் மோதியது. பின்னர் அக்கார் தீப்பற்றிக் கொண்டது.
சம்பவத்தை உறுதிப் படுத்திய மஞ்சோங் மாவட்ட OCPD முகமட் நோர்டின் அப்துல்லா கருகிய அந்த ஓட்டுனரின் உடல் சவப்பரிசோதனைக்காக ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு அனுப்பபட்டிருப்பதாக கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் போலிசை தொடர்புக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.