29 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

குடியுரிமை விண்ணப்பம் ; பெரும்பாலான முதியவர்கள், மலாய் மொழித் தேர்வில் தோல்வி

🔥 Views : 8
👁 Reading Now : 69

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டின் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்யும் முதியவர்களில் பெரும்பாலானோர், மலாய் மொழித் தேர்வில், தேர்ச்சி பெறத் தவறுவதாக, மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

குடியுரிமை விண்ணப்பத்துக்கான தேவைகளில், மலாய் மொழிப் புலமைத் தேர்வும் ஒன்றென, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெளிவுப்படுத்தினார்.

குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்பவர்கள், சம்பந்தப்பட்ட நாட்டின் தேசிய மொழியை பேச தெரிந்திருக்க வேண்டும்.

நம் நாட்டில், மலாய் மொழித் தேர்வில் தேர்ச்சிப் பெற எட்டு மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால், பல சமயங்களில், இரண்டு மதிப்பெண்ணை பெறுபவர்கள் கூட, மலாய் மொழியில் வெறும் நன்றியை மட்டுமே கூற முடிவதையும், அதனை உள்துறை அமைச்சு அங்கீகரித்துள்ளதையும் சைபுடின் சுட்டிக்காட்டினார்.

கடந்த பத்தாண்டுகளில், பத்தாயிரத்து 381 குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ள வேளை ; அதில் பெரும்பாலானவை சிறார்களுடையது எனவும் அமைச்சர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles