32.8 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

சிகாமட் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுக்கு எதிரான வழக்கு கைவிடப்படலாம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

🔥 Views : 8
👁 Reading Now : 52

🔊To listen to this news in Tamil, Please select the text.

சிகாமட் நாடாளுமன்ற் தொகுதி தேர்தல் முடிவுக்கு எதிரான வழக்கு கைவிடப்படலாம். இதனை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கோடிக் காட்டினார்.

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் ஆர். யுனேஸ்வரன் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவை எதிர்த்து தேசிய முன்னணி வேட்பாளரும் மஇகா பொருளாளருமான டான்ஸ்ரீ எம். ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

யுனேஸ்வரனும் அவரது உதவியாளர்களும் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்ததாக ராமசாமி தனது தேர்தல் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய முன்னணி தற்போது ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறது. இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் நாம் ஏற்கெனவே அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ளோம்.

இது குறித்து டான்ஸ்ரீ ராமசாமியுடன் பேசப்பட்டது.

அதே வேளையில் என்னுடை ஆலோசனைகளுக்கு டான்ஸ்ரீ ராமசாமி செவிமடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மஇகா ஆதரவளித்து வருகிறது.

இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இல்லை என்றும் ஜொகூர் மாநில மஇகா மாநாட்டிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles