24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

கோலாலம்பூர் லெபோ அம்பாங்கில் பிரதமருடன் தீபாவளி

🔊To listen to this news in Tamil, Please select the text.

நக்கீரன்

கோலாலம்பூர், அக்டோபர் 29- நாட்டின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரில் பாரம்பரிய வர்த்தக வீதியான லெபோ அம்பாங் வர்த்தக சங்கத்தின் 14-ஆவது ஆண்டு தீபாவளித் திருவிழா, நாளை அக்டோபர் 28-ஆம் நாள் சனிக்கிழமை பகல் 2:00 மணி முதல் நள்ளிரவு வரை லெபோ அம்பாங்கில் நடைபெற உள்ளது. இதன் தொடர்பில் இன்று மாலையில் நடைபெற்ற செய்தியாளர்க் கூட்டத்தில், லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தக சங்கத் தலைவர் டத்தோ ஹஜி ரசூல், இந்த விழாவில் பிரதமர் கலந்துகொள்ள அழைக்கப் பட்டிருக்கும் நிலையில் முடிவு இன்னும் தெரியவில்லை என்றும் மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் கலந்து கொள்வது உறுதி என்றும் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்படும் இந்த நிகழ்வில் உள்ளூர் வெளியூர் கலைஞர்கள் படைக்கும் இசை நிகழ்ச்சியும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. சங்க துணைத் தலைவர் டத்தோ கு.செல்வராஜ் உட்பட ஏனைய பொறுப்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles