28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

பூச்சோங் மக்கள் முற்போக்குக் கழகத்தின்மக்களோடு நாம் மக்களால் நாம் தீபாவளி கொண்டாட்டம்

🔥 Views : 6
👁 Reading Now : 34

🔊To listen to this news in Tamil, Please select the text.

இம்மாதம் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு கடந்த 5ஆம் தேதி அதற்கான கலை இரவு நிகழ்ச்சியை பூச்சோங் முற்போக்குக் கழகம் ஏற்பாடு செய்தது.
இதில் கோவிந்தராஜு (தலைவர்), மாரிமுத்து (துணைத் தலைவர்), முகமட் மன்சோர் (செயலாளர்), கே.தங்கம் (உதவித் தலைவி), எம்.சகுந்தலா (2ஆவது உதவித் தலைவி), ராஜம்மா (துணைப் பொருளாளர்), நளினி (துணைச் செயலாளர்) மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவருக்கும் நாங்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதோடு மட்டுமின்றி மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
தாமான் கின்ராரா பொது மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள் 160 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 70 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. ஓர் அன்பளிப்பின் விலை வெ.60 ஆகும்.
இந்நிகழ்வில் தொழிலதிபர் டத்தோ பத்மநாதன், தொழிலதிபர் ஜஸ்பால் சிங், தொழிலதிபர் கிஷண்டர், முன்னாள் சார்ஜன் சுந்தர், ஏ.எஸ்.பி.ராஜன், கவுன்சிலர் பிரவின் முரளி, தமிழரசு, மோகன் சிங், முன்னாள் செனட்டர் சுரேஷ் சிங், தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் புதிர் போட்டி நடைபெற்றது. சிறார்கள் அனைவருக்கும் புத்தகப் பைகள், 40 பேருக்குத் தீபாவளிக்கான ரொக்கம், மடிக்கணினி பை, புதிர் போட்டிக்கானப் பரிசுகள் சிறார்களுக்கும் முதியோருக்கும் வழங்கப்பட்டன. முதியோருக்குப் பரிசுக் கூடைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் 160 பேருக்கான உணவுச் செலவை டத்தோ பத்மநாதன் ஏற்றுக் கொண்டார். இதில் கடந்த ஆண்டும் இவர்தான் உணவுக்கானச் செலவுகளை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேளையில் பூச்சோங் மக்கள் முற்போக்குக் கழகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இதற்கிடையில் டத்தோ பத்மநாதன் உரையாற்றிய போது, நாட்டில் தொழிலதிபர்கள் ஏராளமானோர் இருப்பதால் அவர்களையும் நாடிச் செல்லுங்கள். அவர்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles