28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மனித நேயத்தையும், புரிந்துணர்வும் வாழ்கையில் கடைப்பிடிக்க பண்டிகைகள் துணைபுரிகின்றன

🔥 Views : 8
👁 Reading Now : 23

🔊To listen to this news in Tamil, Please select the text.

வாழ்வியலில் தீபாவளி போன்ற விழாக்களும், கொண்டாட்டங்களும் வரும் பொழுதான் உறவுகளுடையே ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல் போன்ற உணர்வுகளைக் கண்பதுமட்டுமின்றி மனித நேயத்தையும், புரிந்துணர்வும் வாழ்கையில் கடைப்பிடிக்க பண்டிகைகள் துணைபுரிகின்றன என ஆர் பி எஸ் டூல் டெக் எண்டர்பிரைஸ் நிறுவனர் திரு. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

  அண்மையில் மாசாய் தாமான் ரிந்திங் பொது மண்டபத்தில் ஆர் பி எஸ் டூல் டெக் எண்டர்பிரைஸ் ஏற்பாட்டிலும் புளு டைகர் ஜேபி அன்பு உள்ளங்கள் இயக்கம் மற்றும்  ஆர்.எம்.சி. இன்னிசை குழுவினர் ஆதரவில்  "இன்னிசை மழையோடு தீபாவளி கலை இரவு" கலை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பினாங்கு மாநில எம்ஜிஆர் மறுமலர்ச்சி இயக்க தலைவர், லட்சிய தொண்டர், கலைமாமணி, டாக்டர் எல். ஆர். சிவபாலன் 

மற்றும் வெர்சி இயக்க தலைவர் திரு K.இளங்கோ அவர்கள் சிறப்பு வருகையாளர்களாக கலந்து கொண்டனர். ஆர்.பி.எஸ் டூல் டெக் எண்டர்பிரைஸ் நிறுவனர் திரு ரவீந்திரன் 40 குடும்பங்களுக்கு அரிசி வழங்கினார். மேலும் புளு டைகர் ஜேபி அன்பு உள்ளங்கள் இயக்கத்தலைவர் திரு. ஆர். ஷரன், நல்ல உள்ளம் குழு மற்றும் டாக்டர் நரேன் சார்பில் B40 சார்ந்த 50 மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ஆர்பிஎஸ் சார்பில் நாசி லெமாக்,பானிபூரி மற்றும் கெத்து தமிழன் புரொடக்ஷன் சார்பில் தோசைகளும் வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles