
🔊To listen to this news in Tamil, Please select the text.
வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை கோப்பியோ ஏற்பாட்டில் அனைத்து உலக வர்த்தக மாநாடும் உலக வர்த்தக மாநாடும் விருதுகள் வழங்கும் விழாவும் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இதில் 20 மேற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதன் வருகை பதிவு நடந்து வருகிறது. மலேசியாவில் உள்ள தொழிலதிபர்களும் வணிகர்களும் குறைவாக பதிவு செய்து வருகின்றனர். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள் ஆகும். இதன் மூலம் அந்நிய நாட்டவர்களின் வியாபார நட்பு சந்திப்பு பயனுள்ளதாக இருக்கும் வியாபாரத்தை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த மாநாடு ஒரு அடித்தளமாக இருக்கும் என்று கோப்பியோ தலைவர் குணசேகரன் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் மனிதவள அமைச்சர் சிவகுமாரும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியும் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.



