28.7 C
Kuala Lumpur
Sunday, November 10, 2024

Vetri

ஈப்போவில் கோர விபத்து: தந்தை, 11 மாதக் குழந்தை பலி

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஈப்போ கிளேபாங் ரெஸ்து அருகே குவால கங்சார் சாலையில் 3 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தந்தையும், அவரின் 11 மாத பெண் குழந்தையும் பலியாயினர்.

நேற்று காலை 7.21 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், புரோட்டோன் சாகா காரைச் செலுத்திய 20 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; அவரின் குழந்தை ராஜ பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்ததாக, ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் ஏ.சி.பி Yahaya Hassan சொன்னார்.

அந்த புரோட்டோன் சாகா கார் சாலைச் சந்திப்பில் இருந்து வெளியாகி, சாலையைக் கடக்கும் போது, அதனை, சுங்கை சிப்புட்டில் இருந்து ஈப்போ நோக்கி வந்துக் கொண்டிருந்த மெர்சடிஸ் பென்ஸ் கார் மோதியிருக்கிறது.

இதனால் தடம் புரண்ட புரோட்டோன் சாகா இன்னொரு பெரோடுவா அல்சா காரை மோதியது; எனினும், மற்ற இரு கார்களின் ஓட்டுநர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என ஏ.சி.பி Yahaya சொன்னார்.

உயிரிழந்த தந்தை மற்றும் மகளின் உடல்கள் சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள வேளை, அவ்விபத்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவுமாறும போலிஸ் கேட்டுக் கொண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles