
🔊To listen to this news in Tamil, Please select the text.
மித்ராவுக்கு ஆலோசனை நிறுவனம் தேவையா என்று கல்வி மக்களிடேயே எழுந்துள்ளது. பிரதமர் துறையின் கீழ் முறையாக செயல்பட்டு வந்த மித்ராவை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டது. பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இம்முடியை எடுத்ததில் இருந்து பிரச்சினை தான். இப்பிரச்சினை இன்று வரை தீர்வே இல்லை. மித்ராவின் பணிக் குழுத் தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரபாகரன் நியமிக்கப்பட்டார். ஆனால் மித்ராவுக்குள் அரசியல்வாதிகளை விட மாட்டேன். மித்ராவுக்கு ஆலோசனை வழங்க பெமாண்டு என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.அந்நிறுவனத்திற்கு 5 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டது என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ மக்களவையில் கூறினார்.இதற்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படி மித்ரா தொடர்பில் தொடர்ந்து பல பிரச்சினைகள் எழுந்து வருகிறது. குறிப்பாக பிரதமரின் நியமனமான பிரபாகரனின் நியமனம் செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மித்ராவுக்கு ஆலோசனை வழங்க அரசியல் தலைவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளுக்கும் தகுதி இல்லையா. அதற்கு தனியாக ஒரு நிறுவனம் நியமிக்கப்பட வேண்டுமா. ஆகவே இந்த விவகாரத்திற்கு பிரதமர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்



