26.4 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

உடல் உபாதையால் அவதியுற்று வரும் 11 வயது சிறுவனுக்கு கல்வி கற்க வாய்ப்பு!

🔥 Views : 7
👁 Reading Now : 24

🔊To listen to this news in Tamil, Please select the text.

மூன்று வயதில் இருந்து சுவாசிக்கும் பிரச்சனையை எதிர்நோக்கிய சஞ்ஜீவன் குணசேகரன் எனும் சிறுவன் தமது 11 ஆவது வயதில் படிக்க வாய்ப்பு கிட்டியது. பேராக் , தம்புன் நாடாளுமன்ற தொகுயில் உள்ள சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் oxygent concentrator கருவியின் துணையுடன் அச்சிறுவன் தமது கல்வியை மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்த சிறுவனுக்கு 2 வயது இருக்கும் போது கடுமையான காய்ச்சலால் அவதியுற்று வந்துள்ளார். அடிக்கடி காய்ச்சல ஏற்பட்டு இறுதியில் சுவாசிக்கும் சிக்கலில் தவித்து வந்ததாக அச்சிறுவனின் தாயார் நந்தினி கணேசன் வேதனையுடன் கூறினார். இந்நிலையிலும்,
பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டும் என அச்சிறுவன் உருகியுள்ளார்.
தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு அதிகாரி ஆர் . சுரேஸ்குமார், இந்த விவகாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளார்.
அதன் மூலம், தனது மகனுக்கு பள்ளியில் கல்வியை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அதோடு, oxygent concentrator கருவி வாங்குதற்கு நிதி உதவியும் வழங்கியதாக தஞ்சோங் ரம்புத்தானைச் சேர்ந்த தாயார் நந்தினி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles