26.4 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

கம்போங் ஜாவா பள்ளி விவகாரத்திற்கு சுமூகத் தீர்வு காணப்படும்: குணராஜ்

🔥 Views : 6
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

கம்போங் ஜாவா பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் சாலை விவகாரத்திற்கு சுமூகத் தீர்வு காணப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார். பள்ளி பேருந்து, கார்கள் வீட்டிற்கு முன் நிறுத்தப்படுகிறது. இதனால் குடியிருப்பாளர்கள் அவசரத்திற்கு வெளியே செல்ல முடியவில்லை. அதே வேளையில் பிள்ளைகள் வீட்டிற்கு முன் குப்பைகளை வீசி செல்கின்றனர் என்று குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டினர். எங்களின் பிள்ளைகள் பள்ளிக்கு வந்து செல்ல இது தான் முதன்மை சாலையாக உள்ளது. இச்சாலையைப் பயன்படுத்த பிள்ளைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது எங்களுக்கு பாதிப்பு எனப் பெற்றோர்கள் கூறினர்.

இவ்விரு தரப்பினரின் பிரச்சனைகளும் முழுமையாக கேட்டறியப்பட்டன. இப்பிரச்சினைக்கு நிச்சயம் சுமுகமாகத் தீர்வு காணப்படும் என்று குணராஜ் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles