26.4 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) 25 வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை க்கு மாற்றப்பட்டுள்ளது

🔥 Views : 7
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவிருந்த மக்கள் நீதிக் கட்சியின் 25ஆம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு சிலாங்கூர் ராஜா மூடா மூசா மண்டபத்திலிருந்து, ஷா ஆலமிலிருந்து ஐடியல் கன்வென்ஷன் சென்டர் (ஐடிசிசி), ஷா ஆலமிற்கு இடம் மாற்றப்பட்டதாக என அதன் தகவல் பிரிவுத்  தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

“அசல் தேதி ஏப்ரல் 28 ஆகும், ஆனால் அது ஏப்ரல் 21க்கு  மாற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஐடிசிசியில் நடைபெறும்,” என்று அவர் இன்று பெர்னாமா விடம் சுருக்கமாக கூறினார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு மக்கள் நீதிக் கட்சியின் 25 ஆண்டு கொண்டாட்டம் 11 மே 2024 இரவு அன்று செந்தூல் டிப்போவில் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்த நிறைவு விழாவில் மக்கள் நீதிக் கட்சியின் தலைவராகிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் முக்கிய உரையும் இடம்பெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles