
🔊To listen to this news in Tamil, Please select the text.
பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாநில அரசின் மலிவு
விற்பனைகளில் கலந்து கொண்டு பொருள்கள் வாங்குவதற்குரிய வாய்ப்பினை
கிரேப் வாடகைக் கார் ஓட்டுநரான ஒரு முதியவர் நன்கு பயன்படுத்திக்
கொள்கிறார்.
பயணிகளை ஏற்றிச் செல்லும் இடங்களுக்கு அருகிலுள்ள இடங்களில்
நடைபெறும் மலிவு விற்பனைகளில் பொருள்கள் வாங்குவதற்குரிய
சந்தர்ப்பத்தைத் தாம் ஒருபோதும் தவறவிட்டதில்லை என்று சம்சுடின்
அப்துல் ரஹ்மான் (வயது 73) கூறினார்.
தாம் புலனக் குழுவில் இடம் பெற்றிருப்பதன் மூலம் அன்றாடம் மலிவு
விற்பனை நடைபெறும் இடங்கள் பற்றியத் தகவல்களை தம்மால் எளிதாக
அறிந்து கொள்ள முடிகிறது என்று அவர் சொன்னார்.
நான் ஷா ஆலம் செக்சன் 18இல் வசிக்கிறேன். பயணிகளை ஏற்றிச்
செல்லும் சந்தர்ப்பங்களில் ஈஜோக், செமெந்தா போன்ற இடங்களில்
நடைபெறும மலிவு விற்பனைகளிலும் கலந்து கொள்கிறேன். ஜூவாலான்
ஏஹ்சான் ரஹ்மா புலனக் குழுவில் இடம் பெற்றிருப்பது எனக்குப்
பேருதவியாக உள்ளது என்றார் அவர்.
புலனக் குழுவில் அவ்வப்போது தகவல்கள் புதுப்பிக்கப்படுவதால் மலிவு
விற்பனை நடைபெறும் இடங்கள் குறித்து எளிதாக அறிந்து கொள்ள
முடிகிறது என்று மேருவில் இன்று நடைபெற்ற மலிவு விற்பனையின்
போது சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நோன்புப் பெருநாளை முன்னிட்டு தொடர்ந்து
உறவினர்களும் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளதால் தாம் இந்த மலிவு
விற்பனையில் கூடுதல் பொருள்களை வாங்கியதாகக் குடும்பத்
தலைவியான ஹூஸ்னா ஜெய் (வயது 51) குறிப்பிட்டார்.
நானும் என் கணவரும் வரிசையில் தனித் தனியாக நின்றோம். அதன்
மூலம் அதிகமான பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியது.
இன்று கோழி, அரிசி, மீன், முட்டை, சமையல் எண்ணெய் ஆகியவற்றை
வாங்கினோம். இதன் மதிப்பு சுமார் 200 வெள்ளியாகும். இதே பொருள்களை
சந்தையில் வாங்கியிருந்தால் கூடுதலாகச் செலவிட நேர்ந்திருக்கும்
என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)
ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனையில் கோழி 10.00 வெள்ளிக்கும்
இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00
வெள்ளிக்கும் வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணைய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ
அரிசின் 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
