25.3 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

உளு திராம் தீவிரவாத நடவடிக்கை:

வீரமரணம் அடைந்த இரு போலீசார் குடும்பத்தினருக்கு
பொன்.வேதமூர்த்தி இரங்கல்

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலாலம்பூர், மே 19:
உளு திராம் காவல் நிலையத்தின் மீதான தாக்குதல் தனி மனிதனின் தீவிரவாத செயல் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் அறிக்கை வெளியிட்டிருப்பது, தங்கள் பாதுகாப்புடன் தேசத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலையில் ஆழ்ந்துள்ள மலேசியர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சை அளித்துள்ளது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தாக்குதல்காரனின் தந்தை, தொடக்கத்தில் பயங்கரவாத குழுவான ‘ஜெ ஐ.’ எனப்படும் ஜெம்மா இஸ்லாமிய அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ஓநாய்கள் இப்படி உயிர் குடிக்கவும் அத்துமீறலில் ஈடுபடவும் துணிவதில்லை; இப்படிப்பட்டவர்கள் வழக்கமாக தீவிரவாதம் மற்றும் வெறுப்புப் பிரச்சாரகர்களின் சிந்தாந்தத்திற்கு அடிபணிந்து, அப்படியே உளவியல் மாற்றத்திற்கு ஆட்பட்டவர்களாக இருப்பார்கள். அதேவேளை, தீவிரவாதம் மற்றும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு உட்படும் அனைவரும் அவற்றை அப்படியே ஏற்பதுமில்லை என்று ஹிண்ட்ராஃப் பேரியக்கத் தலைவருமான அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை நாம் வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டும்; நம் நாட்டில், இதுபோன்ற வெறுப்புப் பிரச்சாரகர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும், அவர்களை மன்னிப்பதாகவும் கருதப்படுகிறது; உயர் அதிகாரிகளும் இத்தகைய நபர்களைக் கண்காணிக்கத் தவறிவிடுகின்றனர்.

“சட்ட அமலாக்க நிறுவனங்களும் தேசிய சட்டத்துறை தலைவரும் இந்தச் சிக்கல் குறித்து அவர்களின்முன் நடைமுறை ரீதியாக எடுத்துரைத்து, பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கை மற்றும் உத்திகளை மேம்படுத்து-வதற்கும் செயல்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதுடன் அரசாங்க நிறுவனங்-களின் ஆற்றலை மேம்பத்துவதும்தான் தன் ஒரே நம்பிக்கையாக உள்ளது; மனித உரிமைக் கொள்கை மற்றும் சட்டத்தின் ஆட்சியை பொருட்படுத்தாத வெறுப்புப் பேச்சு உள்ளிட்ட தீவிரவாதம் துளிர்விடுவதற்கான அரசுசாரா காரணிகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்”.

இந்த விவகாரத்தில், பயங்கரவாதத்தைக் கையாளும் தொழில்முறை நிபுணர்களை ஈடுபடுத்துவதில் சட்ட அமலாக்க நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். தனி மனிதனாக தாக்குதலை மேற்கொண்ட நபருக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் அணுக்கமாக ஆய்வு மேற்கொண்டால், இத்தகைய பாதக செயலைத் தூண்டிய அவரின் உளவியல் நிலை குறித்து புரிந்துகொள்ள முடியும்; அதன் மூலம் இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளவும் முடியும். இத்தகைய நபர்களைக் கைது செய்வது அல்லது ரிமாண்டில் வைப்பதைக் காட்டிலும் மென்மையான அணுகுமுறையைக் கையாண்டால், இந்தத் தாக்குதலுக்கான காரணங்களையும் அதற்கு அப்பாற்பட்ட காரணிகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரலாம்.

இந்தத் தாக்குதலில் வீர மரணமடைந்த இரு போலீசாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles