27.5 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

இந்து சங்க மகளிர் பிரிவு ஏற்பாட்டில் இல்ல வழிபாட்டு-கூட்டுப் பிரார்த்தனைப் பயிற்சி

🔥 Views : 10
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய இந்துக் குடும்பங்களின் தலைவியர் தத்தம் இல்லத்தில் நடத்த வேண்டிய வழிபாட்டு முறை, சுற்றுவட்டத்தைச் சேர்ந்த அன்பர்கள்-நண்பர் கள் உள்ளிட்டோரைக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் கூட்டுப் பிரார்த்தனை ஆகியவற்றை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து மூன்று மணி நேர பயிற்சிக்கு மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ளது என்று அதன் மகளிர் பிரிவுத் தலைவர் ‘தொண்டர்மணி’ முனைவர் கலைவாணி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சமயக்காவலர் விவேகரத்னா ஸ்ரீ.சிவஸ்ரீ.நா.தினேஷ் வர்மன் சிவம்

வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 30-ஆம் நாள் காலை 9:00 அளவில் நெகிரி செம்பிலான், 10 ஜலான் செங் மெங் லீ என்னும் இடத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ இராகவேந்திர சுவாமி ஆசிரமத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை மலேசிய இந்து சங்க மகளிர் பிரிவினர் ஒருங்கிணைத்துள்ளார்.

பெண்ணியம் சார்ந்த சமய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் மலேசிய இந்து சங்க மகளிர் பிரிவினர், அதன் தொடர்ச்சியாகவும் அடுத்தக்-கட்ட நிகழ்ச்சியாகவும் ஏற்பாடு செய்துள்ள இந்த ‘இல்ல வழிபாட்டு-கூட்டுப் பிரார்த்தனை’ப் பயிற்சி அரங்கில் அனைவரும் கலந்து பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

‘தொண்டர்மணி’ முனைவர் கலைவாணி சண்முகம்

சமயக் கல்வி-கேள்வியில் சிறந்த ஸ்ரீ சிவஸ்ரீ நா. தினேஷ் வர்மன் சிவம் வழிநடத்தும் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து விளக்கமும் தெளிவும் பெறலாம் என்று ச. கலைவாணி, இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

‘தொண்டர்மணி’ முனைவர் கலைவாணி சணமுகம்
தேசிய மகளிர் பிரிவுத் தலைவர்
மலேசிய இந்து சங்கம்
26.06.2024

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles