25.3 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

இந்திய வர்த்தக சமூகத்திற்கு இரும்புத் திரை போடுகிறதா மதானி அரசு?

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் பொன்.வேதமூர்த்தி வினா!

🔊To listen to this news in Tamil, Please select the text.

இந்திய சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வர்த்தக மேம்-பாட்டிற்காக வெ. 50 மில்லியன் நிதியை Bank Rakyat மூலம் ஒதுக்கி இருப்பதாக அறிவித்துள்ள மதானி அரசாங்கம், மறுபக்கம், இந்திய வர்த்தகர்-கள் அந்த நிதியைப் பெற முடியாதபடி ‘ஹலால்’ சான்றிதழ் அவசியம் என்று விதித்துள்ள கட்டுப்பாட்டின் மூலம் இரும்புத் திரை போட்டுள்ளது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளர்.

இதன் தொடர்பில் பிரதமர் அன்வார் இப்ராகிமிற்கு முன்னாள் அமைச்சரு-மான அவர் கடிதம் அனுப்பியுள்ளார்;

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்-சர் டத்தோ ஆர்.ரமணன், 2024 ஜூன் 06-இல் வெளியிட்ட அறிக்கையில், இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர், மதானி அரசு ஒதுக்கி உள்ள வெ.50 மில்லியன் நிதியை பேங்க் ராயாட்டின் மூலம் உடனே பெற்றுக் கொள்ளும்படி கேட்டிருந்தார்.

மதானி அரசின் இந்த முயற்சி வரவேற்கத் தக்கதுதான். ஆனால், உணவகம் உள்ளிட்ட உணவுத் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் வர்த்தக நடவடிக்கையை மேம்படுத்துவதற்காக இந்த நிதியைப் பெறவேண்டும் என்றால், ஹலால் சான்றிதழ் அவசியம் என்று கட்டுப்பாடு விதித்திருப்பது எந்த வகையில் நியாயம்?

உணவு விநியோக வட்டத்தைச் சேர்ந்தவர்கள், பிற துறை சார்ந்த சிறு-குறு-நடுத்தர தொழில்முனைவோர், பேங்க் ராயாட்-இல் ஹலால் சான்றிதழை ஒப்படைத்தால்தான் நிதி பெறமுடியும் என்று விதித்துள்ள கட்டுப்பாடு, இந்திய வர்த்தக சமுதாயத்தை பின்னால் இழுக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

வளர்ந்து வரும் நாடாகிய மலேசியாவில், 45% ஆக இருக்கும் முஸ்லிம் அல்லாத மக்களின்மீது ஷரியா சட்டவிதிகளைத் திணிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல; மதானி அரசு, அனைத்து மக்களுக்குமான அரசு என பிரதமர் அன்வார் மார்தட்டிக் கொள்கிறார்; ஆனால், பெரிக்காத்தான் கூட்டணி, தேசிய முன்னணி அரசுகளைவிட இந்த மதானி அரசில் இஸ்லாமியத் தாக்கம் அதிகம் இருப்பதாக சமூக ஊடகத்தில் பரவும் செய்திகள், பிரதமரை சாடுவதாகவும் உள்ளன.

மலேசியாவில் வாழ்கின்ற பல இன மக்களும் ஒருவரையொருவர் மதித்து, புரிந்துகொண்டு சமய-இன பாகுபாட்டை யெல்லாம் கடந்து, ஒரு சுமூகமான வர்த்தகக் கட்டமைப்பை நீண்ட காலமாக பராமரித்து வருகின்றனர் என்பதை இந்த மதானி அரசுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹிண்ட்ராஃப் பேரியக்கத்தின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி,

பிரதமர் மீது தாம் இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் இந்திய வர்த்தக சமூகத்தின்மீது திணிக்கப்பட்டுள்ள இந்த மத ரீதியான கட்டுப்பாட்டை அகற்றி, உண்மையான மதானி அரசின் பிரதமர் என்பதை அன்வார் நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கையையும் அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles